கோவிட் பாசிட்டிவ் சோதனையில் பொய் சொன்னதாக நிரூபிக்கப்பட்டால், உலகின் நம்பர் 1 வீரரான நோவக் ஜோகோவிச் 5 ஆண்டு சிறைதண்டனையை சந்திக்க நேரிடும்.
உலகின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச்சுக்குக் புத்தாண்டின் தொடக்கமே சர்ச்சைகளுடன் தொடங்கியிருக்கிறது. 34 வயதான நோவக் ஜோகோவிச் கோவிட் தடுப்பூசி (Corona Vaccine) விலக்கு தொடர்பாக சர்ச்சைகளில் சில நாட்களாக சிக்கியிருக்கிறார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் இந்த மாதம் 17ம் (2022, ஜனவரி 17) தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று போட்டி அமைப்பு குழுவும், ஆஸ்திரேலிய அரசும் அறிவுறுத்தியிருந்தன.
ஆனால், போட்டியில் கலந்துக் கொள்ள வந்த ஜோகோவிச்சிடம், மருத்துவப் பரிசோதனைகள் தொடர்பான உரிய ஆவணங்கள் இல்லை. அவரது விசா ரத்து செய்யப்பட்ட நிலையில், அவர் விமான நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டார்.