பொங்கல் பண்டிகையை ஒட்டி, 1.19 லட்சம் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு, 7.01 கோடி ரூபாய், சாதனை ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
அரசு போக்குவரத்துக் கழகங்கள், போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக் குழு ஆகியவற்றில் தற்போது, 1.19 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு பொங்கல் பண்டிகையை ஒட்டி, சாதனை ஊக்கத்தொகை வழங்கப் பட உள்ளது.
பணியாளர்களில், 2021ம் ஆண்டு 91 நாட்கள் மற்றும் அதற்கு மேல், 151 நாட்களுக்கு குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு, 85 ரூபாய்; 151 நாட்களுக்கு மேல், 200 நாட்களுக்கு குறைவாக பணிபுரிந்தவர்களுக்கு, 195 ரூபாய்.மேலும், 200 நாட்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்தவர்களுக்கு, 625 ரூபாய் வீதம், பொங்கல் பரிசாக சாதனை ஊக்கத்தொகை வழங்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
‘இந்த உத்தரவின்படி, போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும், ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 161 பணியாளர்களுக்கு, 7.01 கோடி ரூபாய் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும்’ என போக்குவரத்து துறை முதன்மைச் செயலர் கோபால் அறிவித்துள்ளார்.