Home உலகம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ள பிரிட்டன் பிரதமர்

வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ள பிரிட்டன் பிரதமர்

by Jey

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 2020ல் கோவிட் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டிருந்த காலத்தில் அவரே அதை மீறி தனது அரசு இல்லத்தில் நண்பர்களுடன் பார்ட்டி கொண்டாடினார். அது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அச்செயலுக்கு தற்போது பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அடுத்ததாக அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் தலைவர்களில் ஒருவர் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன். 2020ல் உலகத்திற்கே கோவிட் புதியது. அதனை கண்டு வளர்ந்த நாடுகள், ஏழை நாடுகள் என்ற பாகுபாடின்றி அஞ்சி நடுங்கினர்.

தொற்று ஆபத்து நிறைந்தவர்களுக்கு மட்டுமல்லாமல் நாட்டுக்கே ஊரடங்கு போடப்பட்டது. கோவிட்டால் இறந்தவர்களின் உறவினர்களை கூட இறுதிச் சடங்கிற்கு அனுமதிக்காத அவலங்கள் நிகழ்ந்தேறியது.

 

அந்த சமயத்தில் இங்கிலாந்திலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டன. இறுதிச் சடங்கு உள்ளிட்ட வெளி நிகழ்ச்சிகளில் கூட மக்கள் கலக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தனர். போலீசார் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

தொடர் விதிமீறலுக்கு சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. உச்சமாக சொந்த சகோதரரின் இறுதித் தருவாயை பெண் ஒருவர் வீடியோ அழைப்பு மூலமாக மட்டுமே பார்க்க அனுமதித்தனர். அதே சமயத்தில் பிரிட்டன் பிரதமர் தனது அரசு இல்லத்தில் நண்பர்களுடன் கோவிட் விதிமீறி மது அருந்தினார். அப்புகைப்படம் வெளியாகி மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை பெற்றது.

 

அதற்கு தற்போது போரிஸ் ஜான்சன் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது பேசிய அவர், ‘கோவிட் விதிகளை பின்பற்றிய, இறுதிச் சடங்குகளில் கூட பங்கேற்காத லட்சக்கணக்கான பிரிட்டன் மக்களுக்கு நான் மரியாதை கொடுக்கவில்லை.

அவர்களுக்கும் இந்த சபைக்கும் எனது மனப்பூர்வ மன்னிப்பைக் கோருகிறேன்.’ என்றார். அதனை எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மெர் ஏற்கவில்லை. பயனற்ற மன்னிப்பு என கூறியவர், வெட்கமற்ற மனிதர் என்றும், பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

related posts