Home இந்தியா 15ம் திகதி மதுக்டைகளுக்கு விடுமுறை

15ம் திகதி மதுக்டைகளுக்கு விடுமுறை

by Jey

பொங்கலை முன்னிட்டும், வரும் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், இன்றும், நாளையும் மது விற்பனை அமோகமாக இருக்கும் என்பதால், ‘டாஸ்மாக்’ கிடங்குகளில் இருந்து, மதுக் கடைகளுக்கு அதிகளவில் மது வகைகள் சப்ளை செய்யப்பட்டு வருகின்றன.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் 5,410 சில்லரை கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மது வகைகளை விற்பனை செய்கிறது. வழக்கம்அவற்றில் தினமும் சராசரியாக 100 கோடி ரூபாய்க்கும்; வார விடுமுறை நாட்களில் அதை விட அதிகமாகவும் மது வகைகள் விற்பனைஆகின்றன.

வேலைக்காக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிப்போர், பொங்கல் கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வர். அப்போது, நண்பர்களுடன் மது விருந்தில் ஈடுபடுவது :வழக்கம். எதிர்பார்ப்புநாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நாளை மறுநாள் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, 15ம் திகதி மதுக் கடைகளுக்கு விடுமுறை.

முழு ஊரடங்கால் அதற்கு அடுத்த நாளான 16ம்திகதி ஞாயிற்றுக் கிழமையும் விடுமுறை. வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு, 18ம் திகதியும் விடுமுறை வருகிறது.இதனால், ‘குடி’மகன்கள் விடுமுறை நாட்களுக்கும் சேர்த்து, நேற்று முதல் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி, சாக்கு பைகளிலும், பெட்டிகளிலும் எடுத்து சென்றபடி உள்ளனர்.

குறிப்பாக, இன்றும், நாளையும் மது வகைகள் விற்பனை மிகவும் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, டாஸ்மாக் கிடங்குகளில் இருந்து, மதுக் கடைகளுக்கு மது வகைகள் அதிகளவில் உடனுக்குடன் சப்ளை செய்யப்படுகின்றன.
இன்றும், நாளையும் கூட்டத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, சென்னை, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் இருந்து உயர் அதிகாரிகள், மாவட்ட மேலாளர்களுடன், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக ஆலோசனை நடத்தினர்.

 

related posts