உக்ரேய்னுக்கான பயணங்கள் தொடர்பில் கனேடிய பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கனேடிய பிரஜைகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உக்ரேய்ன் எல்லைப் பகுதியில் ரஸ்யாக படையினரை குவித்து வரும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எந்த நேரத்திலும் ரஸ்யா, உக்ரேய்னுக்குள் ஊடுறுவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உக்ரேய்னின் பாதுகாப்பு சூழ்நிலை ஆபத்தானதாக காணப்படுவதாகவும் இதனால் அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக தங்கியிருப்பவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.