Home உலகம் உலகளாவிய ஏழை மக்கள் குறித்த தகவல் இணையத்தில் வைரல்

உலகளாவிய ஏழை மக்கள் குறித்த தகவல் இணையத்தில் வைரல்

by Jey

கொரோனாவால் வறுமை கோட்டுக்குகீழ் தள்ளப்பட்ட 16 கோடி மக்கள் சுவிட்ஸர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்ற டாவோஸ் அஜெண்டா மாநாட்டில் ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் அமைப்பு ஓர் பகீர் தகவலை வெளியிட்டது.

இதன்படி கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா தாக்கம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட உலகளாவிய ஏழை மக்கள் குறித்த இந்த தகவல் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களில் 4 பெண்களில் ஒருவர் மரணம் அடைவதாகவும் ஒரு நாளில் 20 ஆயிரம்பேர் இதுபோல மரணம் அடைந்ததாகவும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த மரணங்களுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மருத்துவ வசதியின்மை, பாலினம் சார்ந்த வன்முறை, பசி பட்டினி, காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல காரணங்களால் கிட்டத்தட்ட 16 கோடி பேர் வறுமை கோட்டுக்கு கீழ் தள்ளப்பட்டுள்ளதாக கூறிய இந்த ஆய்வு, உலக செல்வந்தர்கள் குறித்த தகவலையும் வெளியிட்டது.

ஒரு வினாடிக்கு 15 ஆயிரம் அமெரிக்க டாலர் ஈட்டும் செல்வந்தர்கள் இந்த இரண்டு ஆண்டுகளில் தங்களது 99 சதவீத சொத்துக்களை இழந்தாலும் அவர்கள் செல்வந்தர்களாக இருந்திருப்பார். ஆனால் தற்போது வைரஸ் தாக்கம் காரணமாக வறுமை கோட்டுக்கு கீழ் தள்ளப்பட்ட மக்களின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 3.1 பில்லியன் உலக குடிமக்களைக் காட்டிலும் 6 மடங்கு அதிக செல்வம் ஈடியவர்களாக உள்ளனர்.

இவ்வாறு அந்த ஆய்வு முடிவு கூறுகிறது. இதன் மூலமாக உலக அளவில் கீழ் நடுத்தர மற்றும் ஏழை வர்க்கத்தை வைரஸ் தாக்கம் அதிக அளவு பாதித்துள்ளது தெளிவாகிறது.

related posts