சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக சரிவடைந்து வருகிறது. மேலும், 2021ல் மக்கள் தொகை ஆறு லட்சம் என்ற அளவிற்கே உயர்ந்துள்ளது.
நம் அண்டை நாடான சீனாவில் 2021ம் ஆண்டு மக்கள் தொகை அறிக்கையை அந்த நாட்டின் தேசிய புள்ளிவிபரத் துறை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2021ல் சீனாவின் மக்கள் தொகை 141 கோடியே 26 லட்சமாக உயர்ந்துள்ளது.
இது, 2020ல் 141 கோடியே 20 லட்சமாக இருந்தது. இதன்படி கடந்த ஒரு ஆண்டில் மக்கள் தொகை ஆறு லட்சம் அதிகரித்துள்ளது.இதே காலத்தில் குழந்தை பிறப்பு விகிதம் ஒரு கோடியே ஆறு லட்சமாக குறைந்துள்ளது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.’சீனாவில் பிறப்பு விகிதம் சரிந்து வருவது பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும்
வேலை செய்யும் திறன் உள்ளோர் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் விகிதாச்சாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்’ என, பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். சிச்சுவான், ஜியாங்ஸி மாகாணங்கள் குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் நோக்கில் திருமணம், மகப்பேறு, குழந்தை பராமரிப்பு ஆகியவற்றுக்கு அளிக்கும் விடுப்பு நாட்களை அதிகரித்துள்ளன.