Home இந்தியா வாட்ஸ் ஆப் வாயிலாக, மாடுகள் விற்பனை

வாட்ஸ் ஆப் வாயிலாக, மாடுகள் விற்பனை

by Jey

கொரோனாவால் மாட்டு சந்தைகளில் கெடுபிடி அதிகரித்து வரும் நிலையில், வாட்ஸ் ஆப் வாயிலாக, மாடுகள் விற்பனையை துவக்கி இருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.

ஈரோடு கருங்கல்பாளையம், நாமக்கல் மோர்பாளையம், திருச்செங்கோடு, சேலம் – அமரகுந்தி, திருநெல்வேலி – மேலப்பாளையம் உட்பட 41 பிரசித்தி பெற்ற மாட்டு சந்தைகள் உள்ளன.

முழு ஊரடங்குஇங்கெல்லாம் மாடுகள் வாங்க, கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநில வியாபாரிகள் வருவர்.தற்போது கொரோனா மூன்றாவது அலை துவங்கி உள்ளதால், மாடு வளர்ப்பவர்கள், வியாபாரிகளுக்கு பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்படுகின்றன. மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற தகவலும் வியாபாரிகள் மத்தியில் பரவி வருகிறது.

இதனால், வியாபாரிகள், மாடு வளர்ப்பவர்கள் தங்களுக்குள் வாட்ஸ் ஆப், பேஸ்புக் குரூப்புகளை உருவாக்கி, மாடுகள் விற்பனையை அதன் வாயிலாக மேற்கொள்ள துவங்கி விட்டனர். மாடுகளை விற்பனை செய்பவர்கள், அதன் படம், கிடாரி, பால் மாடு, உழவு மாடு என வகைப்படுத்தி, விலை விபரம், தொடர்பு எண், முகவரி போன்றவற்றை பதிவிடுகின்றனர். அதை தெரிந்து கொள்ளும் வியாபாரிகள், மாடு வளர்ப்போரின் வீடு, தோட்டங்களுக்கு சென்று மாடுகளை பார்வையிட்டு வாங்கிச் செல்கின்றனர்.

மாடு வளர்ப்பவர்கள் அளிக்கும் படம், குறிப்பிடும் விலையை எல்லாம், வெளி மாவட்ட, மாநில வியாபாரிகளுக்கு, உள்ளூர் வியாபாரிகள் அனுப்பி விலை பேசி விற்பனை செய்கின்றனர். 20 முதல் 30 மாடுகள் வாங்கியவுடன் உள்ளூர் வியாபாரிகள், லாரிகளில் மாடுகளை ஏற்றி அனுப்புகின்றனர். மாடுகளுக்கான பணம் விற்போரின் வங்கி கணக்கில் பரிமாற்றம் செய்யப்படுகிறது.

related posts