சுதந்திர தின விழாவின் போது சாட்டிலைட் ஒன்றை தமிழக மாணவர்கள் குழு விண்ணில் ஏவ இருக்கிறது.
இளையராஜா பாடலை விண்ணில் ஏவப்படும் சாட்டிலைட்டில் ஒலிக்க செய்ய மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
திரைத்துறையில் இன்றளவும் அசைக்கமுடியாத இசை ஜாம்பவானாக திகழ்பவர் இசைஞானி இளையராஜா (ilayaraja). மதிமயக்கும் இவரது பாடல்களுக்கு இளைஞர் தொடங்கி பெரியவர்கள் வரை அடிமையாகி உள்ளனர். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி நடைபெற போகும் சுதந்திர தின விழாவின் போது மிக குறைந்த அளவில் எடைகொண்ட சாட்டிலைட் ஒன்றை தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் குழு விண்ணில் ஏவ இருக்கிறது.
அதில் கூடுதல் சிறப்பாக இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் பெருமைகளை எடுத்துரைக்கும் விதமாக இளையராஜா பாடும் பாடலை சுதந்திர விழாவின்போது விண்ணில் ஏவப்படும் சாட்டிலைட்டில் ஒலிக்க செய்ய மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த மாணவர்கள் தான் உலகிலேயே குறைவான எடைகொண்ட சாட்டிலைட்டை தயாரிக்கின்றனர். இதுவரை தயாரித்ததை விட இந்த சுதந்திர தின விழாவுக்காக தயாரிக்கப்பட்ட சாட்டிலைட்டை மிக குறைந்த எடையில் தயாரித்துள்ளனர்.
இந்த பாடல் சுவானந்த் கிர்கிரே கைவண்ணத்தில் ஹிந்தியில் உருவானது, இதனை தற்போது இளையராஜா தமிழ் மொழியில் பாடியுள்ளார். இஸ்ரோ உதவியுடன் இளையராஜா இந்த ஆண்டு 75வது ஆண்டு சுதந்திர தினத்தை சிறப்பிக்க உள்ளார். இந்த முயற்சி குறித்து மாணவர்கள் இந்திய பிரதமர் மோடியிடமும் கலந்தோசித்து உள்ளனர். மேலும் இளையராஜா இந்த பாடலுக்கு சன்மானம் எதுவும் வாங்காமல், தேசப்பற்றோடு இதனை நான் செய்து கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார், இது கூடுதல் சிறப்பை அளித்துள்ளது.