அமெரிக்காவைச் சேர்ந்த ‘புளும்பெர்க் பிலன்த்ரோபிஸ்’ நிறுவனம் ஆண்டு தோறும் நகர்ப்புறங்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியை நடத்தி வருகிறது.
இதன்படி கொரோனா காலத்தில் சுகாதாரச் சூழலை மேம்படுத்தி வேலையில்லா திண்டாட்டத்தை குறைத்து பருவநிலை மாற்றத்தை சமாளிக்கும் கண்டுபிடிப்புகளுக்கான போட்டி அறிவிக்கப்பட்டது.
இதில் 99 நாடுகளைச் சேர்ந்த 631 நகரங்கள் பங்கேற்றன. இதில் நம் நாட்டின் ஒடிசா மாநிலத்தின் தொழில் நகரமான ரூர்கேலா நியூசிலாந்தின் வெலிங்டன், அமெரிக்காவின் பீனிக்ஸ் உட்பட 15 நகரங்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுஉள்ளன.
இவற்றுக்கு தலா 7.50 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்.மகளிர் கூட்டுறவு அமைப்புகளுக்கான குளிர்பதன கிடங்கு வசதியை உருவாக்கியதற்காக ரூர்கேலா நகரத்திற்கு பரிசு கிடைத்துள்ளது. ‘ரூர்கேலா நகர நிர்வாகம் அதன் கண்டுபிடிப்பை அடுத்த மூன்று ஆண்டுகளில் செயல்பாட்டிற்கு கொண்டு வரும்’ என புளும்பெர்க் பிலன்த்ரோபிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.