சரவணா ஸ்டோர்ஸ் குழுமத்தின் கடைகளுக்கு இந்தியன் வங்கி சீல் வைக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
தமிழகத்தில் பல கிளைகளுடன் செயல்பட்டுவரும் சரவணா ஸ்டோர்ஸ் (Saravana Stores) நிறுவனம் மிகவும் பிரபலமான நிறுவனம். இது பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. சரவணா என்ற பெயரில் மூன்று கடைகள் இருக்கிறது என்பது நினைவு கொள்ளத்தக்கது.
2017 ஆம் ஆண்டு இந்தியன் வங்கியில் சென்னை ரங்கநாதன் தெருவில் மற்றும் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் ஜவுளிக்கடைகள் சார்பில் சுமார் 240 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டது.
இந்த கடன் தொகையானது வட்டியுடன் சேர்த்து 450 கோடி ரூபாய் ஆக அதிகரித்த நிலையில், நிலுவை கடன் தொகையை உடனடியாக கட்ட வேண்டும் என்று இந்தியன் வங்கி, சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்திற்கு அறிவுறுத்தியது.
வங்கியிலிருந்து பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், நிறுவனத்தின் சார்பில் தேவையான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாத நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு முறைப்படி நோட்டீஸ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
நோட்டீசுக்கு பிறகும், சரவணா ஸ்டோர்ஸ் (Saravana Stores) நிறுவனத்தின் சார்பில் அசலோ வட்டியோ செலுத்தப்படாததால் இந்தியன் வங்கி அதிரடி நடவடிக்கை எடுத்தது.
இன்று (ஜனவரி 19, 2022) காலை, காவல்துறை உதவியுடன் வங்கி அதிகாரிகள் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர் மற்றும் வடக்கு உஸ்மான் சாலை உள்ள சரவணா டோர்ஸ் கடைகளுக்கு சென்றனர்.
கடைகளில் உள்ள பொருட்களை பறிமுதல் செய்து ஜப்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள், கடனை கட்டவில்லை என்றால், அடுத்த கட்டமாக இரண்டு கடைகளுக்கு சீல் வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.