9,000 கோடி ரூபாய்க்கும் மேல் வங்கி கடன் மோசடி செய்தது தொடர்பாக, லண்டனுக்கு தப்பி சென்ற விஜய் மல்லையா, தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
லண்டனுக்கு சென்ற அவர் மீது CBI மற்றும் அமலாக்கத்துறை பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ள நிலையில் அவரை இங்கிலாந்தில் இருந்து விசாரனைக்காக நாடு திருப்பி அழைத்து வரை இந்தியாவும் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவின் கோரிக்கையை ஏற்று விஜய் மல்லையாவை இங்கிலாந்து அரசு கைது செய்தாலும், அவர் ஜாமீனில் வெளி வந்தார்.
அவரை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்து உயர் நீதி மன்றத்தின் உதவியை மல்லையா நாடினார். இது தொடர்பாக வழக்கு விசாரணையும் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஒரு வழக்கில் அவருக்கு பெரும் பின்னடைவாக லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் பங்களாவை கைப்பற்றி விற்கும் உரிமையை யுபிஎஸ் வங்கி வென்றுள்ளது. தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையா (Vijay Mallya), அவரது குடும்பத்தினர் அனைவரையும் லண்டன் பங்களாவில் இருந்து வெளியேற இங்கிலாந்து நீதிமன்றம் செவ்வாயன்று உத்தரவிட்டது.
தப்பியோடிய தொழிலதிபர் மல்லையா மற்றும் அவரது குடும்பத்தினர், 34 வயது மகன் சித்தார்த்தா மற்றும் 95 வயதான அவரது தாயார் லலிதா ஆகியோர் அங்கு தங்கியுள்ளனர். மல்லையாவின் வீட்டை சுவிஸ் வங்கியான யுபிஎஸ் கைப்பற்றியுள்ளது. இது லண்டனில் உள்ள ரீஜண்ட்ஸ் பூங்காவைக் கண்டும் காணாத 65 வயதான தொழிலதிபரின் பிரதான சொத்து கார்ன்வால் டெரஸ் அபார்ட்மெண்ட் ஆகும்.
விஜய் மல்லையா 20.4 மில்லியன் பவுண்டுகள் கடன் பட்டுள்ளார். அதாவது யூபிஎஸ் நிறுவனத்திற்கு சுமார் ரூ.185.4 கோடி கடன் நிலுவையில் உள்ளது. இந்த தீர்ப்பில் மிக முக்கியமாக, நீதிமன்ற உத்தரவுக்கு உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யவோ அல்லது தீர்ப்பை அமல்படுத்துவதில் தற்காலிக தடை வழங்குவதற்கான அனுமதியிம் நீதிபதி நிராகரித்தார். யூபிஎஸ் விஜய் மல்லையாவின் வீட்டை உடனே கைப்பற்றலாம் என்பதை இந்த தீர்ப்பு குறிக்கிறது.
2019 ஆம் ஆண்டில், மும்பை நீதிமன்றம் விஜய் மல்லையாவை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக (FEO) அறிவித்தது, மேலும் அவர் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் FEO ஆக அறிவிக்கப்பட்ட முதல் தொழிலதிபர் ஆனார். மல்லையா மார்ச் 2016 இல் இந்தியாவை விட்டு தப்பிச் சென்ற போது, 13 பொதுத்துறை வங்கிகளின் கூட்டமைப்பிற்கு சுமார் 9,000 கோடி ரூபாய் கடன் நிலுவையில் இருந்தது.
கடந்த மாதம், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்(FM Niramala Sitharaman), விஜய் மல்லையா, நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி போன்ற தப்பியோடியவர்களின் சொத்து விற்பனையில் இருந்து ரூ.13,109.17 கோடியை கடன் வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஜூலை 16, 2021 அன்று முன்னாள் கிங்பிஷர் ஏர்லைன் முதலாளி மற்றும் பிறருக்குச் சொந்தமான சொத்துக்களை விற்றதன் மூலம் ரூ.792 கோடி மீட்கப்பட்டுள்ளது.