பிரம்டனில் ஆண் ஒருவரினதும், பெண் ஒருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பீல் பிராந்திய பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பிரம்டனின் ரெட் காஷல் வீதியில் வாகனமொன்றில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களின் ஆள் அடையாள விபரங்கள் எதனையும் பொலிஸார் இதுவரையில் வெளியிடவில்லை.