உக்ரேய்ன் மீது படையெடுப்பதற்கு ரஸ்யா காரணம் தேடுகின்றது என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கனேடிய அரசாங்கம் தொடர்ச்சியாக உக்ரேய்னுக்கு ஆதரவளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக சமாதானத்தை நிலைநாட்டவும், உக்ரேய்ன் மக்களின் நலன்புரிகளை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரேய்னுக்கு ஆயுதங்களை வழங்கினால், அதனை ஓர் காரணமாக கொண்டு ரஸ்யா தாக்குதல்களை தொடுக்க சாத்தியமுண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏதேனும் ஓர் காரணத்தை பயன்படுத்தி உக்ரேய்ன் மீது தாக்குதல் நடாத்துவதற்கு ரஸ்யா முயற்சிப்பதாக ட்ரூடோ ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.