Home இந்தியா சட்டமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்த மு.க.ஸ்டாலின் தயாரா?.

சட்டமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்த மு.க.ஸ்டாலின் தயாரா?.

by Jey

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன். இவர் கடந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சாராக செயல்பட்டார்.

இதற்கிடையில், கே.பி. அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கே.பி. அன்பழகனின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 57 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

மேலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்தை விட கூடுதலாக 11.32 கோடி ரூபாய் சொத்துக்குவித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசி மோகன், சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெறும் ரெய்டு மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி. அதிமுகவை அழித்து நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதே திமுகவின் நோக்கம்.

சட்டமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்த மு.க.ஸ்டாலின் தயாரா?. தேர்தலை நடத்தினால் ஒரு தொகுதியில் கூட திமுக ஜெயிக்காது. முன்னாள் அமைச்சர்களை குறி வைத்து சோதனை நடத்துவதா?; லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு நானும் தயாராக உள்ளேன். எப்போது வேண்டுமானாலும் லஞ்ச ஒழிப்புத்துறை எனது வீட்டுக்கு வந்து சோதனை நடத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

related posts