அமெரிக்கா தனது வான்வெளி பயணத்திலும் பாதுகாப்பிலும் 5ஜி தொழிநுட்பத்தை அறிமுகபடுத்தியிருக்கும் நிலையில், பலநாட்டு விமானங்கள் அமெரிக்காவிற்கான விமான சேவையை நிறுத்தியுள்ளன.
உலகின் மிக நவீனமான 5ஜி தொழில்நுட்பத்தை பற்றி முழுமையாக அறியாததாலும், இதர அம்சங்களும் பலருக்கு புரியாதது நிலையில், முறையான பயிற்சியும் அனுபவமின்றி அதில் நுழைவது விமானத்துக்கு ஏதும் ஆபத்தை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் காரணமாக சேவைகளை நிறுத்தி வைத்திருக்கின்றன. இந்தியாவின் ஏர் இந்தியா (Air India) நிறுவணமும் நேற்று சில விமானங்களை ரத்து செய்தது.
அதிவேக 5ஜி தொழில்நுட்பத்திற்கான (5G Network) செல்போன் கோபுரங்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சால், விமான போக்குவரத்து பாதிக்கப்படும் என்றும், விமானம் பறக்கும் உயரத்தை அறிய முடியாமல் விமானிகளுக்கு குழப்பம் ஏற்படலாம் என்றும், கூறி வந்த நிலையில், ஜனவரி 19ஆம் தேதி துபாயில் இருந்து அமெரிக்காவிற்கு பறந்த எமிரேட்ஸ் போயிங் 777 விமானம், அதன் இலக்கான சான் பிரான்சிஸ்கோவிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள ரஷ்யாவில் தரையிறங்கியது. விமானம் நடுவானில் கட்டுப்பாட்டு பிரச்சனையை எதிர் கொண்டதை அடுத்து ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்குத் திருப்பி விடப்பட்டது.
சுமார், 10 மணி நேரத்திற்கும் மேலாக வானில் வட்டமடித்து பிரச்சனையை தீர்க்க முயன்ற போதிலும், சான் பிரான்சிஸ்கோ செல்ல முடியாமல் போனது.
இந்நிலையில், பாஸ்டன், சிகாகோ, டல்லாஸ்-ஃபோர்ட் வொர்த், ஹூஸ்டன், மியாமி, நெவார்க், ஆர்லாண்டோ, சான் பிரான்சிஸ்கோ மற்றும் சியாட்டில் ஆகிய இடங்களை பட்டியலிட்டுள்ள எமிரேட்ஸ் நிறுவனம், ஜனவரி 19, 2022 முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை அந்த குறிப்பிட்ட அமெரிக்க இடங்களுக்கான விமானங்களை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளது.
எனினும், நியூயார்க் JFK, லாஸ் ஏஞ்சல்ஸ் (LAX) மற்றும் வாஷிங்டன், DC (IAD) ஆகிய இடங்களுக்கு விமான சேவையை விமான நிறுவனம் தொடர்ந்து வழங்கும் என்று எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.