Home இந்தியா பட்ஜெட்டில் பெண்கள் எவற்றையெல்லாம் எதிர்பார்க்கிறார்கள்?

பட்ஜெட்டில் பெண்கள் எவற்றையெல்லாம் எதிர்பார்க்கிறார்கள்?

by Jey

இந்தியாவில் 2005 ஆம் ஆண்டு முதல், ஆண் பெண் என இரு பாலினருக்கும் பிரத்யேக அம்சங்களை உள்ளடக்கிய பட்ஜெட் செயல்முறை தொடங்கியது. அதன் பின்னர், பெண்கள் சார்ந்த மற்றும் பெண்கள் தொடர்பான பல்வேறு திட்டங்களுக்கு நிலையான பட்ஜெட் ஒதுக்கீடுகள் நடந்து வருகின்றன.

இந்த ஒதுக்கீடுகள் மத்திய பட்ஜெட்டின் பாலின பட்ஜெட் அறிக்கையில் (Union Budget’s Gender Budget Statement) விவரிக்கப்பட்டுள்ளன. மத்திய பட்ஜெட் நிதியாண்டு முழுவதும் தனிநபர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதால், இதில் பிரத்யேகமான, தெளிவான பாலின முன்னோக்கு இருப்பது மிகவும் முக்கியமாகும்.

பிப்ரவரி 1 ஆம் திகதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) 2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட்டில் பெண்கள் எவற்றையெல்லாம் எதிர்பார்க்கிறார்கள்? எந்தெந்த விதமான முன்னேற்றங்களுக்காக காத்திருக்கிறார்கள்? பெண்கள் உன்னிப்பாக கவனிக்கக்கூடிய முக்கிய அம்சங்கள் என்ன? அனைத்தையும் இந்த பதிவில் காணலாம்.

பட்ஜெட் ஒதுக்கீட்டில் அதிக பங்கு

– 2005-06 ஆம் ஆண்டில், நிதி ஒதுக்கீட்டில் பாலின ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு முயற்சியாக துவக்கப்பட்ட பாலின பட்ஜெட், மொத்த பட்ஜெட் (Union Budget) செலவினத்தில் 4.8 சதவிகிதமாக இருந்தது.

இருப்பினும், பட்ஜெட்டில் அதன் சதவீதம் பல ஆண்டுகளாக ஒப்பீட்டளவில் சராசரியாக 5 சதவீதமாகவே, தேக்க நிலையில் இருந்து வந்துள்ளது. 2021 மத்திய பட்ஜெட்டில் பாலின பட்ஜெட் 6.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

– தொற்றுநோய் காலத்தில் பெண்கள் அனுபவிக்கும் விகிதாசார வேலை இழப்புகளைக் கணக்கிட்டால், பட்ஜெட் ஒதுக்கீடு அதற்கு போதுமானதாக இல்லை.

– மேலும், ஊரடங்கு காலத்தில், வீடுகளில் பெண்களுக்கு நடக்கும் வன்முறைகளும் அதிகரித்துள்ள. இவை தவிர, அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதால், மகப்பேறு மற்றும் தாய் சேய் நலப் பணிகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

related posts