Home கனடா ஒன்றாரியோவில் கூடுதலான அளவில் தடுப்பூசி ஏற்றப்பட்டதாக குற்றச்சாட்டு

ஒன்றாரியோவில் கூடுதலான அளவில் தடுப்பூசி ஏற்றப்பட்டதாக குற்றச்சாட்டு

by Jey

ஒன்றாரியோவில் கூடுதலான அளவில் கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆறு கோவிட் தடுப்பூசி டோஸ்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்தளவு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒன்றாரியோ தடுப்பூசி நிலையமொன்றில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

பூஸ்டர் டோஸ் ஏற்றப்பட்ட சிலருக்கு இவ்வாறு கூடுதல் அளவில் மருந்து கலந்து தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

ஒன்றாரியோவின் Schomberg Medical Clinic இல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பூஸ்டர் மாத்திரைக்காக வழங்கப்படும் தடுப்பூசியில் 0.25 மில்லி லீற்றர் அளவு மருந்தே காணப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், தடுப்பூசியின் மருந்து அளவினை குறைக்காது முழு அளவில் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தவறுதலாக இவ்வாறு கூடுதல் அளவில் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தடுப்பூசி நிலையம் தனது நிலைப்பாட்டை இதுவரையில் பகிரங்கப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

related posts