மெக்ஸிக்கோவில் நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மெக்ஸிக்கோவின் கரீபியன் கரையோரப் பகுதியான Quintana Roo மாநிலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரின் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த இருவரும் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டுக்களும் நிலவி வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
எவ்வாறெனினும் உயிரிழந்தவர்களின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.