கடனாவின் கிழக்கு யோர்க் பகுதியில் 15 வயதான சிறுவன் மீது 13 வயதான சிறுவன் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளான்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 13 வயதான சிறுவன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிழக்கு யோர்க்கின் கேம்பள் அவன்யூவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 15 வயதான ஜோர்டன் கார்டர் என்ற சிறுவன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சிறுவன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.