Home உலகம் அமெரிக்காவில் லாரி விபத்தில் 100 குரங்குகள் தப்பியோட்டம்

அமெரிக்காவில் லாரி விபத்தில் 100 குரங்குகள் தப்பியோட்டம்

by Jey

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் ஏற்பட்ட லாரி விபத்தில் ஆய்வுக் கூடத்தை சேர்ந்த 100 குரங்குகள் தப்பின. இவை பத்திரமாக மீட்கப்பட்டு விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், குரங்குகளை வைத்து தொற்று நோய்களுக்கான மருந்துகளை ஆய்வு செய்து வருகிறது.இந்நிலையில் ஆய்வுக்காக இந்திய பெருங்கடல் நாடான மொரீஷியசிலிருந்து 100 குரங்குகள், பென்சில்வேனியாவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்துக்கு அனுப்பப்பட்டன.

நியூயார்க் விமான நிலையத்திலிருந்து லாரியில் குரங்குகள் ஏற்றப்பட்டு பென்சில்வேனியாவுக்கு கொண்டு செல்லபட்டன.பென்சில்வேனியா நெடுஞ்சாலையில் சென்றபோது லாரி விபத்துக்குள்ளானதில் 100 குரங்குகளும் தப்பியோடி விட்டன. இதையடுத்து பென்சில்வேனியா போலீசாரும், வனத்துறையினும் போராடி 100 குரங்குளையும் மீட்டனர்.

related posts