Home சினிமா சிம்புவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்ததை பற்றி கூறுகையில்…

சிம்புவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்ததை பற்றி கூறுகையில்…

by Jey

சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து இப்படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு சிம்பு மேலும் தனது உடல் எடையை குறைத்து இருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் படத்தின் ரிலீஸ் குறித்தும், சிம்பு குறித்தும் சுவாரஸ்யமான தகவல்களை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதில் , முதன்முறையாக சிம்பு என் வீட்டிற்கு வந்தபோது அவரின் புதிய தோற்றத்தை கண்டு நான் வியந்து போனேன், ஏனெனில் உடல் எடையை கடுமையாக குறைத்து என் முன் வந்து நின்றார், அவரின் கடின உழைப்பு என்னை ஆச்சர்யப்படுத்தியது. மேலும் சிம்புவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்ததை பற்றி கூறுகையில், எங்கள் தயாரிப்பில் அவர் படம் நடிப்பதால் நாங்கள் அவருக்கு பட்டம் கொடுக்கவில்லை, அவரின் பன்முகத்திறமையை பாராட்டும் விதமாக தான் அவருக்கு பட்டம் கொடுத்தோம் என்று கூறினார். இந்த படத்தில் சிம்பு 5 விதமான கெட்டப்களில் நடிக்கிறார், இப்படம் நிச்சயம் ரசிகர்களுக்கு நல்லதொரு விருந்தாக அமையும். ஏப்ரல் 14 அன்று படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம், ஆனால் கொரோனா தொற்று பரவல் மற்றும் பிற நடிகர்களின் படங்கள் ரிலீஸை வைத்து ரிலீஸ் தேதி மாற்றப்படலாம் என்றும் கூறியுள்ளார்

related posts