உக்ரைனில் உள்ள தனது தூதரக பணியாளர்களின் பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு கனடா அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
ரஷ்யா, உக்ரேய்ன் மீது படையெடுக்கக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவித்து இவ்வாறு உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் தனது உக்ரைன் தூதரகத்தில் இருந்து சில தூதரக அதிகாரிகளை வெளியேற்றுவதாக அறிவித்திருந்தது.
முன்னதாக, அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தனது உக்ரைன் தூதரக பணியாளர்களின் குடும்பத்தினரை வெளியேறுமாறு அறிவுறுத்தியிருந்தது.
இவ்வாறான பின்னணியில் கனடா தனது தூதரக பணியாளர்களின் உறவினர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.