Home உலகம் ஜோ பைடன் மன்னிப்பு கேட்க வேண்டும் – எதிர்க்கட்சிகள்

ஜோ பைடன் மன்னிப்பு கேட்க வேண்டும் – எதிர்க்கட்சிகள்

by Jey

மைக் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது என நினைத்து கேள்வி கேட்ட பத்திரிக்கையாளரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளைமாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்கள் சந்திப்பின் முடிவில் பைடனிடம் ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் பீட்டர் டூசி, நாட்டில் அதிகரித்து வரும் பண வீக்கம் தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்ததால் மைக் ஆஃப் செய்யப்பட்டிருக்கும் என நினைத்த ஜோ பைடன், அந்த செய்தியாளரை பார்த்து, அது மிகப்பெரிய சொத்து… அதிக பணவீக்கம்…. என்ன ஒரு முட்டாள்தனமான நபர்’ என கெட்டவார்த்தையால் திட்டினார். இது மைக்கில் பதிவானது.

இதை கேட்ட செய்தியாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். செய்தியாளரை ஜோ பைடன் ஒருமையில் திட்டும் வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ஜோ பைடன் மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

related posts