கோவிட் தடுப்பூசி எற்றிக் கொள்ளாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டுமென மக்கள் கருதுகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
நானோஸ் ஆய்வு நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கோவிட் கட்டுப்பாடுகளுக்கு மக்கள் தங்களது ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளனர்.
55 வயதுக்கும் மேற்பட்ட தடுப்பூசி ஏற்றப்படாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் அதிகாரத்தை மாகாண அரசாங்கங்களுக்கு வழங்கப்பட வேண்டுமென கொள்கைகளுக்கு பலரும் ஆதரவினை வெளியிட்டுள்ளனர்.
அபராதம் விதிக்கும் யோசனைக்கு ஒன்றாரியோ மாகாணத்தில் கூடுதலான ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது.