Home உலகம் வி சாட் நிறுவனத்திற்கு ஆஸ்திரேலிய அரசு கோரிக்கை

வி சாட் நிறுவனத்திற்கு ஆஸ்திரேலிய அரசு கோரிக்கை

by Jey

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனின், ‘வி சாட்’ கணக்கு முடக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்குப் பின்னால், சீன கம்யூனிஸ்ட் அரசு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், சீன செயலியான, ‘வி சாட்’ செயலியை பயன்படுத்தி வருகிறார். அவரை அந்த செயலி வாயிலாக 76 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வந்தனர்.இந்நிலையில் ஸ்காட் மாரிசனின் வி சாட் கணக்கிற்குள் விஷமிகள் சிலர் ஊடுருவி அதை முடக்கியுள்ளனர். அவரது கணக்கிற்கு, ‘ஆஸ்திரேலிய சீன நியூ லைப்’ என பெயர் மாற்றப்பட்டு, அதிலிருந்த அவரின் புகைப்படமும் நீக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் குறித்து, அவரை பின்தொடர்ந்த 76 ஆயிரம் பேருக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்பட்டது. இதனால் ஸ்காட் மாரிசனால், தன் கணக்கை உபயோகிக்க முடியாமல் போனது. இதற்கிடையே அவரது கணக்கை மீட்டுத் தர, வி சாட் நிறுவனத்திற்கு ஆஸ்திரேலிய அரசு கோரிக்கை வைத்துள்ளது.

வரும் மே மாதம் நடைபெற உள்ள ஆஸ்திரேலிய பொதுத் தேர்தலில் தலையிடும் வகையில் பிரதமரின் வி சாட் கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்றும், இதில சீன கம்யூனிஸ்ட் அரசுக்கு தொடர்பு இருக்கும் என்றும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

related posts