ட்ரக் சாரதிகளின் போராட்டம் உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்தாது என மாகாண போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra தெரிவித்துள்ளார்.
கனடா – அமெரிக்க எல்லைப் பகுதிகளில் சில ட்ரக் சாரதிகள் தடுப்பூசி குறித்த நியதிகளை பின்பற்ற முடியாது என கூறியுள்ளனர்.
ஒரு சிறு தொகுதி ட்ரக் சாரதிகள் எதிர்ப்பை வெளியிட்டாலும் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும், விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்படாது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கோவிட் காரணமாக ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் விநியோகச் சங்கிலி முறையில் சில தடைகள் காணப்பட்டாலும் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியாக பொருட்களை விநியோகம் செய்ய முடியும் என பல்பொருள் அங்காடிகளும் ஏனைய வர்த்தக நிலையங்களும் உறுதிமொழி வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.