Home இந்தியா இந்திய தாய்த்திரு நாட்டின் 73வது குடியரசு தினவிழா

இந்திய தாய்த்திரு நாட்டின் 73வது குடியரசு தினவிழா

by Jey

இந்திய தாய்த்திரு நாட்டின் 73வது குடியரசு தினவிழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லி ராஜபாதையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டு இது. இந்த ஆண்டில் இன்று தலைநகர் டெல்லியில் 73வது குடியரசு தினவிழா கோலாகலமாக நடைபெற்றது.

குடியரசு தின விழாவையொட்டி ராஜபாதையில் முப்படைகளின் கம்பீர அணிவகுப்பு, பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, நாட்டின் பண்பாட்டை பறை சாற்றும் கலைநிகழச்சிகள் நடைபெற்றன. முப்படைகளின் அணிவகுப்பு, சாகசங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றன.

தொடக்க நிகழ்வாக, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காலை 10.30 மணிக்கு தலைநகர் புதுடெல்லியில் உள்ள ராஜபாதையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

வீரதீர செயல்புரிந்தவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகள் வழங்கி கவுரவித்தார்.

96 விமானப்படை வீரர்கள், 4 அதிகாரிகள் கொண்ட விமானப் படை அணிவகுப்பு நடைபெற்றது.மிக்-21 , ரபேல் விமானங்கள், லைட் காம்பாட் ஹெலிகாப்டர் அணிவகுப்புகள் இடம் பெற்றிருந்தன.

‘நாங்கள் பாதுகாப்போம்’ என்ற வாசகத்துடன் கடலோர காவல்படை வீரர்கள் அணிவகுப்பு நடைபெற்றது.ஆஞ்செல் ஷர்மா தலைமையிலான 96 இளம் மாலுமிகள் அணிவகுத்து சென்றனர்.

இந்திய ராணுவத்தின் 6 படைப்பிரிவுகளான ‘அசாம் ரெஜிமெண்ட், ஜம்மு காஷ்மீர் லைட் ரெஜிமெண்ட், சீக் லைட் ரெஜிமெண்ட், பாராசூட் ரெஜிமெண்ட் , மெட்ராஸ் ரெஜிமெண்ட் வீரர்கள்’ அணிவகுப்பு நடைபெற்றது.

சென்னை ஆவடியில் தயாரான அர்ஜூன் ரக பீரங்கியும் அணிவகுப்பில் இடம்பிடித்தது.

இந்திய ராணுவத்தின் குதிரைப் படை வீரர்கள் அணிவகுப்பு நடத்தினர்.வீரர்களின் இருசக்கர வாகன சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

குடியரசு தின அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அலங்கார ஊர்திகள் ராஜபாதை வழியாக அணிவகுத்து வந்தன. நாடு முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கலைஞர்கள் நடன நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த விழாவில் முகக்கவசம் கட்டாயம் என்று வரையறுக்கப்பட்டு பின்பற்றப்பட்டது.

இறுதியாக இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக வானில் 75 போர் விமானங்கள் அணிவகுத்து சென்று வீரசாகசங்கள் வானில் நடத்திக் காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து, நாட்டுப்பண் இசைக்கப்பட்டு விழா இனிதே நிறைவடைந்தது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல், பயங்கரவாத அச்சுறுத்தல்கள் ஆகிய சவால்களுக்கு இடையே இந்த விழாவையொட்டி பல அடுக்கு பாதுகாப்புடன் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

 

related posts