ஒன்றாரியோ மாகாணத்தில் சில ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுவதற்கு முடியாது என தெரிவித்துள்ளனர்.
பாடசாலைகளில் கோவிட் பெருந்தொற்று நிலைமைகளினால் இந்த நிலைமை உருவாகியுள்ளது.
பாடசாலைகளில் வகுப்புக்களை நடாத்துவது மிகவும் சிரமமானது என ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கோவிட் தொற்று உறுதியாளர்கள் பற்றிய விபரங்களை மாகாண அரசாங்கம் சரியான முறையில் வழங்குவதில்லை என ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பாதுகாப்பற்ற பணிச்சூழலில் வேலை செய்ய முடியாது என நிராகரிப்பதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.