உக்ரேய்ன் இராணுவப் படையினருக்கு தொடர்ச்சியாக பயிற்சிகள் வழங்கப்படும் என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இராணுவப் பயிற்சி அளிப்பது குறித்து இரு நாடுகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை எதிர்வரும் மார்ச் மாதத்துடன் பூர்த்தியாகின்றது.
இந்த நிலையில் குறித்த இராணுவப் பயிற்சி வழங்கும் நடவடிக்கைகளை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீடிப்பதாக பிரதமர் அறிவித்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தின் இறுதியில் பிரதமர் ட்ரூடோ ஊடகங்களிடம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், ஆயுதங்களை வழங்குவது குறித்து எவ்வித இணக்கப்பாடுகளும் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்படவில்லை.
நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து உக்ரேய்னிய நண்பர்களுக்கு தொடர்ந்தும் உதவிகள் வழங்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.