பிரிட்டிஷ் கொலம்பியாவின் ரிச்மன்ட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்றில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வீடு ஒன்றில் இருந்தவர்கள் மீது திட்டமிட்ட அடிப்படையில் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது.
ரிச்மன்டின் கார்டன் சிட்டி வீதியில் அமைந்துள்ள விடோன்றில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு லோவர் மிடில் லாண்ட் கோஷ்டி மோதலுக்கும் தொடர்பு கிடையாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் ஆள் அடையாள விபரங்களை பொலிஸார் வெளியிடவில்லை எனினும், உயிரழந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் தெரிந்தவர்களாகவே இருக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகின்றது.