Home இந்தியா விவசாயிகள் பிரச்சினை நாடு முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது

விவசாயிகள் பிரச்சினை நாடு முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது

by Jey

கிசான் கிரெடிட் கார்டு என்பது விவசாயிகளை கந்து வட்டிக்காரர்களின் பிடியில் இருந்து விடுவிக்கவும், விவசாயத்திற்கு குறைந்த விலையில் கடன் கிடைக்கவும் தொடங்கப்பட்ட ஒரு சிறந்த திட்டமாகும்.

இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. 2022 பட்ஜெட்டில், KCC கடனின் வரம்பை அரசாங்கம் மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிசான் கிரெடிட் கார்டு வரம்பு அதிகரிக்கக்கூடும்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை (Budget 2022 https://zeenews.india.com/tamil/india/budget-2022-expectations-jewellers…) தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பெரிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

சில காலமாக, விவசாயிகள் பிரச்சினை நாடு முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எனவே, விவசாயிகளுக்காக மத்திய அரசு பெரிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும்.

விவசாய நிபுணர்களின் கூற்றுப்படி, மோடி அரசாங்கம் கிசான் கிரெடிட் கார்டின் வரம்பை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டில் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் (KCC interest rate) கடன் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கிசான் கிரெடிட் கார்டு கடன் வட்டி விகிதம்

கிசான் கிரெடிட் கார்டில் வாங்கப்படும் கடனுக்கு 7 சதவீத வட்டி வசூலிக்கப்படுகிறது. ஆனால், விவசாயி கடனை ஓராண்டுக்குள் திருப்பிச் செலுத்தினால், 4 சதவீத வட்டி மட்டும் செலுத்தினால் போதும்.

related posts