ஒன்றாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் எரிவாயுவின் விலைகள் மேலும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்றைய தினம் குறித்த மாகாணங்களின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒரு லீற்றருக்கு இரண்டு சதம் கூடுதல் தொகையை செலுத்த நேரிடும் என தெரிவிக்கப்படுகின்றது.
றொரன்டோ பெரும்பாக பகுதியில் ஒரு லீற்றர் எரிவாயுவின் விலை 161.9 சதங்களாக விற்பனை செய்யப்படுகின்றது.
இந்த விலை அதிகரிப்பு எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எவ்வாறெனினும், மேற்கு கடனேடிய பகுதிகளில் எரிவாயு விலை ஸ்திரமான நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.