கோவிட் சுகாதார கட்டுப்பாடுகளை எதிர்த்து முன்னெடுக்கப்படும் டிரக் பேரணியினால் வன்முறைக்கான சாத்தியக்கூறுகள் குறித்து கவலைப்படுவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகிறார்.
வார இறுதி நாட்களில் நாடாளுமன்ற வளாகத்தினை நோக்கி இந்த பேரணி முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
போராட்டத்தில் பங்கேற்கும் பலர் வன்முறையைத் தூண்ட விரும்பவில்லை என்ற போதிலும், ஒரு சிறிய குழு குழப்பங்களை விளைவிக்க முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நபர்களினால் இந்தப் போராட்டத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய சாத்தியம் உண்டு என பிரதமர் தெரிவித்துள்ளார்.