Home உலகம் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்யாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை

பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்யாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை

by Jey

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை உள்ளது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகிறது.

கடந்த ஆண்டு நவம்பர் முதல் உக்ரைன் எல்லையில் ரஷியா தனது படைகளை குவித்து வருகிறது. அதிநவீன ஆயுதங்கள், போர் தளவாடங்கள் குவிக்கப்பட்டுள்ளன. மேலும், 1 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்களையும் உக்ரைன் எல்லையில் ரஷியா குவித்துள்ளது.

இதனால், உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வருவதால் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.

இதனிடையே, உக்ரைன் மீது ரஷியா அடுத்த ஆண்டு படையெடுக்கலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. அவ்வாறு படையெடுக்கும் பட்சத்தில் அமெரிக்கா, நேட்டோ படைகள் உக்ரைனுக்கும் ஆதரவளிக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. போர் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா – ரஷியா இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் மீது படையெடுத்தால் பெரும் உயிரிழப்பு ஏற்படும் என ரஷியாவுக்கு அமெரிக்கா மும்படைகளின் தலைமை தளபதி ஜெரனல் மார்க் மில்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தும் பட்சத்தில் அது மிகப்பெரிய உயிரிழப்புக்கு வழிவகுக்கும். மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் சண்டை நடைபெறும்பட்சத்தில் அது மிகவும் கொடூரமாக இருக்கும்’ என்றார்.

related posts