தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று புதிதாக 1 லட்சத்து 40 ஆயிரத்து 979 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 24 ஆயிரத்து 418 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 4,508 பேரும், கோவையில் 3,309 பேரும், திருப்பூரில் 1,649 பேரும், செங்கல்பட்டில் 1,614 பேரும், சேலத்தில் 1,264 பேரும், ஈரோட்டில் 1,198 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 6 கோடியே 14 லட்சத்து 87 ஆயிரத்து 264 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, 33 லட்சத்து 03 ஆயிரத்து 702 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 2 லட்சத்து 08 ஆயிரத்து 350 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரியில் 26 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 20 பேரும் என 46 பேர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை மொத்தம் 37 ஆயிரத்து 506 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.
இத்தொற்று பாதிப்பில் இருந்து இன்று 27 ஆயிரத்து 885 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 30 லட்சத்து 57 ஆயிரத்து 846 பேர் குணம் அடைந்து உள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.