Home உலகம் அமெரிக்காவை பணிய வைக்கும் நோக்கத்தில் வடகொரியா

அமெரிக்காவை பணிய வைக்கும் நோக்கத்தில் வடகொரியா

by Jey

வட கொரியா இம்மாதம் ஆறு முறை ஏவுகணை சோதனை நடத்திய நிலையில், 2017க்கு பின் மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணையை ஏழாவது முறையாக நேற்று ஏவி சோதனை செய்தது.

கிழக்கு ஆசிய நாடான வடகொரியா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை, கொரோனா பரவல் போன்றவற்றால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. ஆறு முறைஆனாலும் அமெரிக்காவை பணிய வைக்கும் நோக்கத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, நீருக்கடியில் பாய்ந்து தாக்கும் ஏவுகணை, அணு ஏவுகணை என அடுத்தடுத்து சோதனைகளை நடத்தி வருகிறது

. ஒரு புறம் அண்டை நாடுகளான தென் கொரியா, ஜப்பான் ஆகியவற்றை மிரட்டவும், அந்நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா விதித்துள்ள தடையை அகற்றவும், வட கொரியா ஏவுகணை சோதனைகளை அடிக்கடி நடத்துவதாக கூறப்படுகிறது. இந்த மாதத்தில் மட்டும் வட கொரியா ஆறு முறை ஏவுகணை சோதனைகளை நடத்தி உள்ளது.அண்டை நாடுகள்

இந்நிலையில் ஏழாவது முறையாக மேலும் ஒரு ஏவுகணை சோதனையை நேற்று நடத்தியது. அண்டை நாடுகளின் பிராந்திய பகுதிகளை தவிர்ப்பதற்காக, உயரமான இடத்திலிருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது.

அதிகபட்சமாக 2,000 கி.மீ., உயரம் பறந்த ஏவுகணை பின், கடலில் விழுந்ததாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.’கடந்த 2017க்கு பின் வடகொரியா சோதித்து பார்க்கும் மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணை இது’ என கூறப்படுகிறது.

related posts