உத்தர பிரதேசத்தில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலையில், உதவித் தொகையுடன் தமிழில் பிஎச்.டி., எனும் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பை முடிக்கும் வசதி உள்ளது.
அப்பல்கலையின் உதவி பேராசிரியர் ஜெகதீசன் கூறியதாவது:பனாரஸ் ஹிந்து பல்கலையின் மொழியியல் துறையில், உலக மற்றும் இந்திய மொழிகளில் ஆய்வுப் படிப்புகள் உள்ளன. அதில், தமிழ் துறையும் உள்ளது. இதில், எட்டு பேராசிரியர்கள் உள்ளனர்.
ஒரு பேராசிரியரிடம் இருவர் முனைவர் பட்டம் பெறலாம்.ஏற்கனவே நான்கு மாணவர்கள் சேர்ந்துவிட்ட நிலையில், மேலும் நால்வர் சேர வாய்ப்புள்ளது. இரண்டு இடங்கள் நுழைவு தேர்வு வாயிலாகவும்; இரண்டு இடங்கள் ‘நெட்’ தேர்வு முடித்தவர்கள் வாயிலாகவும் நேரடியாக நிரப்பப்பட உள்ளன.
இதற்கு, பிப்., 15க்குள் பல்கலையின் http://bhuonline.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.பனாரஸ் ஹிந்து பல்கலை ஒரு மத்திய பல்கலை என்பதால், இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் 8,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். குறைந்த கட்டணத்தில் உணவு, விடுதி வசதிகளும் உள்ளன.
இந்த பல்கலையில் மொழியியலை தேர்வு செய்யும் மாணவர்கள், கூடுதலாக உலக மொழிகளான பிரெஞ்சு, ஜெர்மன், கொரியன் உள்ளிட்ட மொழிகளையும், இந்திய மொழிகளான ஹிந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளையும் படிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.மேலும் விபரங்களுக்கு, 90945 89745, 73760 31107 என்ற மொபைல் போன் எண்களிலோ;