Home உலகம் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கை…

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கை…

by Jey

ஏமனில் ஹவுதி பயங்கரவாத குழுவினரால் 2,000 குழந்தைகள் போரில் ஈடுபடுத்தப்பட்டு, ஒன்றறை ஆண்டு காலத்தில் உயிரிழந்துள்ளதாக ஐ.நா., அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேற்காசிய நாடான ஏமனில் ஹவுதி பயங்கரவாத குழுவுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையே 2014 முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்நிலையில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:ஏமனில் உள்ள பல்வேறு இடங்களில் தங்கள் சித்தாந்தங்களை பரப்பி ஹவுதி பயங்கரவாத குழுவினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.

கோடை பயிற்சி வகுப்புகள் என்ற பெயரில் சிறுவர் – சிறுமியரை பயங்கரவாத அமைப்பில் சேர்க்கின்றனர். இந்த குழந்தைகள் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக கோஷங்களை எழுப்ப பயிற்றுவிக்கப்படுகின்றனர். ஒரு முகாமில், 7 வயதான குழந்தைகளுக்கு ஆயுதங்களை சுத்தம் செய்வது, ராக்கெட் தாக்குதலில் இருந்து தப்பித்தல் குறித்து கற்பிக்கப்பட்டுள்ளது.கலாசார நிகழ்ச்சிகளில் பங்கு பெற அழைத்து செல்வதாக கூறி குழந்தைகள் போரில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

அவர்கள் மீது பாலியல் அத்துமீறல்களும் நடக்கின்றன.கடந்த 2020 ஜன., முதல் 2021 மே வரையிலான காலகட்டத்தில், 10 – 17 வயது வரையிலான 2,000 சிறுவர் – சிறுமியர் போரில் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

related posts