Home கனடா கன்சர்வேட்டிவ் கட்சி அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்துகின்றது

கன்சர்வேட்டிவ் கட்சி அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்துகின்றது

by Jey

கன்சர்வேட்டிவ் கட்சி அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு திட்டமிட்ட அடிப்படையில் தடை ஏற்படுத்தி வருவதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ஆறு வார கால இடைவெளியின் பின்னர் இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கு கன்சர்வேட்டிவ் கட்சி திட்டமிட்ட அடிப்படையில் தடையை ஏற்படுத்தி வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இறுதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ள தவறியிருந்தது.

இதனால் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு சிறுபான்மை கட்சிகளின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

கன்சர்வேட்டிவ் கட்சி கனேடியர்களின் நலன்களை கருத்திற்கொண்டு செயற்படத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

புளொக் கியூபிகோ மற்றும் என்.டி.பி கட்சி ஆகியனவற்றின் ஒத்துழைப்பினை அவர் கோரியுள்ளார்.

related posts