Home இலங்கை கோவிட் சுகாதார வழிகாட்டல்கள் தொடர்ந்தும் நீடிப்பு

கோவிட் சுகாதார வழிகாட்டல்கள் தொடர்ந்தும் நீடிப்பு

by Jey

தற்போதுள்ள கொவிட் -19 தடுப்பு வழிகாட்டுதல்கள் 2022 பெப்ரவரி 28 ஆம் தேதி வரை சுகாதார அமைச்சகத்தால் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் திருத்தங்களுக்கு உட்பட்டு இந்த நீடிப்பு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இதேவேளை, பூஸ்டர் தடுப்பூசியை வழங்குவதற்கான நடமாடும் சேவை அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என கொவிட் 19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த நடமாடும் தடுப்பூசிகளுக்கு முப்படையைச் சேர்ந்த அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவதாகவும் ,கொவிட் பரவுவதைத் தடுக்க பூஸ்டர் தடுப்பூசியைப் பெறுவது மிகவும் முக்கியமானது எனவும் , அனைத்து மக்களையும் உடனடியாக தடுப்பூசியைப் பெறுமாறும் இராணுவத் தளபதி வலியுறுத்தினார்.

மேலும் பூஸ்டர் பற்றிய புராணக் கருத்துக்களால் ஏமாற வேண்டாம் எனவும் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இராணுவத்தினர் தடுப்பூசி நிலையங்களை வெற்றிகரமாக அமைத்துள்ளதாகவும் திரு.சில்வா தெரிவித்தார்.

related posts