ட்ரக் போராட்டத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்கான பொலிஸார் பெருந்தொகை பணத்தை செலவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படிகின்றது.
ட்ரக் சாரதிகள் பேரணியாக நாடாளுமன்றை நோக்கி பயணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஹோர்ன்களை ஒலிக்கச் செய்து தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
கோவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கிலேயே இந்த மாபெரும் ட்ரக் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த நிலையில், குறித்த போராட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக மட்டும் நாள் ஒன்றுக்கு 800,000 டொலர்களை செலவிட நேரிட்டுள்ளதாக ஒட்டாவா பொலிஸார் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளனர்.
போராட்டக்காரர்கள் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் பொருத்தமற்ற வகையில் செயற்பட்டதாகவும் பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.