தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19-ம் திகதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22-ம் திகதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, இடப்பங்கீடு குறித்த ஆலோசனைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
இதனிடையே, திமுக மூத்த நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவரும் தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். அண்ணா அறிவாலயத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட திமுக திட்டமிட்டுள்ளது.
கூட்டணி கட்சிகளுக்கு 10 முதல் 12 சதவீத இடங்களை ஒதுக்க திமுக முடிவு செய்து என தகவல் வெளியாகியுள்ளது.