சீனாவின் புத்தாண்டு இன்று. அந்நாட்டில் சந்திர புத்தாண்டு, மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. வழக்கமாக மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊருக்குத் செல்வார்கள். ஆனால், இந்த ஆண்டு கொரோனாவால் புத்தாண்டு கொண்டாட்டங்களில் பல மாறுதல்கள் காணப்படுகின்றன.
சீனா, ஹாங்காங், மக்காவு, தைவான், சிங்கப்பூர், தாய்லாந்து, கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, மொரிசியஸ், மற்றும் பிலிப்பைன்ஸ் உட்பட சீன மக்கள் கணிசமாக உள்ள நாடுகள் மற்றும் பிரதேசங்களில் சீனப் புத்தாண்டு (New Year 2022) கொண்டாடப்படுகிறது.
தொற்றுநோயால், புத்தாண்டுக்கு வீடு திரும்ப இயலாமல் மக்கள் மன வருத்தப்படுகின்றனர். சாதாரண காலங்களில், லட்சக்கணக்கான மக்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள் என சீனாவில் பலரும் பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் மூலம் தங்கள் கூடுகளுக்கு பயணிப்பார்கள்.
வசந்தகால விழா
சீன மொழியில் “வசந்த விழா” என்று அழைக்கப்படும் இந்த விடுமுறையானது சீனாவின் மிக முக்கியமான தேசியத் திருவிழா.(New Year 2022) பெரும்பாலும், தொழிலாளர்கள் கணவன், மனைவி, பெற்றோர் அல்லது குழந்தைகளைப் பார்ப்பதற்கான ஒரே வாய்ப்பு இந்த புத்தாண்டு சந்தர்ப்பம் தான் என்று கூறப்படுகிறது.
முதன்முதலில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்றுநோய், 2021ம் ஆண்டிலும் தொடர்ந்து, மக்களின் கொண்டாட்டத்தை கட்டுப்படுத்தியது.
இப்போதும் கொரோனாவின் தாக்கம் தீராத நிலையில், இந்த ஆண்டு புத்தாண்டும் (New Year 2022) சற்று சுணக்கமாகவே இருக்கிறது.
இந்த ஆண்டு, ஓமிக்ரான் வகை கொரோனா தொற்றால் மகக்ளின் புத்தாண்டு கொண்டாட்டங்களும் பயணங்களும் மீண்டும் தடைபட்டுள்ளது.
பிப்ரவரி 4ம் தேதி முதல் 20ம் தேதிவரை, பெய்ஜிங்கில், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவிருப்பதால், கொரோனாவின் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் கடுமையான தொற்றுநோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
சில மாகாண அரசாங்கங்கள் குடியிருப்பாளர்கள் வேறு எங்கும் செல்லவேண்டும் என்று வெளிப்படையாகக் கேட்டுக்கொள்கின்றன, கடலோர உற்பத்தி மண்டலங்கள், புலம்பெயர்ந்த தொழிற்சாலைத் தொழிலாளர்கள் பயணிக்காமல் இருக்க போனஸ்களை வழங்குகின்றன,
பிப்ரவரி முதல் தேதியான இன்று தொடங்கும் சீன புத்தாண்டை (New Year 2022) முன்னிட்டு பயண முன்பதிவுகள் மீண்டும் அதிகரித்துள்ளதாகவும், ஷாங்காய் ரயில் நிலையம் இந்த வாரத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்துக் கொண்டிருப்பதாகவும் வரும் தகவல்கள், சீன அரசாங்கத்திற்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
“மக்கள் வீடு திரும்புவதை வெளிப்படையாக தடை செய்ய வேண்டாம்” என்று உள்ளூர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், மக்கள் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான மற்றும் அமைதியான வசந்த விழாவைக் கொண்டாட முடியுமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
ஆனால், பெய்ஜிங்கில் பலருக்கு இது மற்றொரு வீட்டு விடுமுறையாக இருக்கும். குளிர்கால ஒலிம்பிக்கின் காரணமாக, தலைநகரின் குடிமக்கள் வெளியேற வேண்டாம் என்று அதிக அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர், அத்துடன் இறுக்கமாக கட்டுப்படுத்தப்பட்ட நகரத்திற்குள் எப்போது அனுமதிக்கப்படுவார்கள் என்ற நிச்சயமற்ற தன்மையையும் எதிர்கொள்கின்றனர்.
ஆனால், புத்தாண்டிற்கு பயணம் மேற்கொள்ள முடியாவிட்டாலும், அதன்பிறகு நாங்கள் சொந்த ஊருக்கு சென்று குடும்பத்தினரை சந்திக்க முடியுமா என்று மக்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
கொரோனாவின் தாயகமாக நம்பப்படும் சீனாவையே, ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனாவின் தொடர் பிறழ்வுகள், புத்தாண்டு கொண்டாட்டங்களையும் வெகுவாக பாதித்திருக்கிறது.