Home கனடா உக்ரேய்ன் கனேடிய பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையில் இரகசிய பேச்சுவார்த்தை

உக்ரேய்ன் கனேடிய பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையில் இரகசிய பேச்சுவார்த்தை

by Jey

கனேடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்துக்கும் உக்ரேய்னின் பாதுகாப்பு அமைச்சர் Oleksii Reznikov க்கும் இடையில் மூடிய கதவு பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது.

சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இந்தப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பெரும் உயிர் அழிவுகளை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்ளை வழங்குமாறு உக்ரேய்ன் விடுத்து வரும் கோரிக்கைக்கு இதுவரையில் கனடா பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலைகள் தொடர்பில் இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

உக்ரேய்ன் எல்லைப் பகுதியில் ஒரு லட்சம் படையினரை ரஸ்யா குவித்துள்ள பின்னணியில் இந்தப் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது.

உக்ரேய்ன் பாதுகாப்பு அமைச்சருடன் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் பற்றிய விபரங்களை கனேடிய பாதுகாப்பு அமைச்சர் ஊடகங்களுக்கு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

related posts