கேரள மாநிலம் திருவந்தபுரத்தை சேர்ந்தவர் வாவா சுரேஷ் இவர் வன உயிரின ஆர்வலராக செயலாற்றி வருகிறார் பாம்புகள் மீது தீரா பாசமும் பற்றும் கொண்டுள்ள இவர் கேரள மாநிலம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் பாம்புகளை பிடித்துள்ளார் இதில் 200க்கும் மேற்பட்ட ராஜ நாகங்கள் , தவறுதலாக மக்கள் குடியிருப்புகளில் வரும் பாம்புகளை பாதுகாப்பான முறையில் எந்த வித உபகரணங்கள் இல்லாமல் வெறும் கைகளில் பிடித்து அதனை மீட்டு வன பகுதிகளில் கொண்டு விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள குறிச்சி என்ற பகுதியில் நாக பாம்பு ஒன்று ஊருக்குள் சுற்றி திரிவதக கிடைத்த தகவலை அடுத்து இன்று மாலை அங்கு சென்ற வாவா சுரேஷ் வழக்கம் போல் அந்த பாம்பை தனது வெறும் கைகளால் பிடித்து அதனை தான் வைத்திருந்த சாக்கு பைகுள் அடைக்க முயன்ற போது திடீரென நாகம் அவரது வலது கால் தொடையில் கடித்தது.
இதனை அடுத்து அவரது காலில் கடித்த பாம்பை இழுத்து கீழே போட்டு விட்டு அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தா் சுரேஷ்.உடனடியாக அப்பகுதியில் வேடிக்கை பார்க்க வந்த கூட்டத்தில் இருந்த சிலர் அவரை மருத்துவமனையில் சேர்ந்தனர். கொடும் விஷப் பாம்பு கடிதத்தில் சுயநினைவை இழந்த நிலையில் மிகவும் அபாகரமான கட்டத்தில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
.