றொரன்டோவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை வேளையில் சுமார் 20 சென்றிமீற்றர் வரையில் பனிப்பொழிவு நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் முதல் எதிர்வரும் வெள்ளி வரையில் தொடர்ச்சியாக பனிப்பொழிவு நிலவும் என கனேடிய சுற்றாடல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
றொரன்டோ, ஹால்டன், பீல், டர்ஹம் மற்றும் யோர்க் ஆகிய பிராந்தியங்களிலும் பனிப் பொழிவு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 முதல் 20 சென்றிமீற்றர் வரையில் இவ்வாறு பனிப்பொழிவு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.