Home இந்தியா ஜி.எஸ்.டி., வரி செலுத்துவோருக்கு உதவி மையம்

ஜி.எஸ்.டி., வரி செலுத்துவோருக்கு உதவி மையம்

by Jey

ஜி.எஸ்.டி., வரி செலுத்துவோருக்கு உதவும் வகையில், சென்னை வடக்கு கமிஷனர் அலுவலகத்தில், உதவி மையம் துவங்கப்பட்டுள்ளது.

மற்றும் புதுச்சேரி மண்டல ஜி.எஸ்.டி., அலுவலகத்தில், இந்த உதவி மையத்தை, தலைமை கமிஷனர் எம்.வி.எஸ்.சவுத்ரி துவங்கி வைத்தார். சென்னை வடக்கு மண்டல ஜி.எஸ்.டி., முதன்மை கமிஷனர் எம்.எம்.பார்த்திபன் உடன் இருந்தார்.

இதுகுறித்து, ஜி.எஸ்.டி., தலைமை கமிஷனர் எம்.வி.எஸ்.சவுத்ரி கூறியதாவது:தமிழகத்தில் ஏற்கெனவே ஐந்து மையங்கள் செயல்படுகின்றன. இந்த உதவி மையத்தை, 94458 98686 மற்றும் 044 – 2833 1009 ஆகிய எண்களில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து, வணிகர்கள் அழைக்கலாம்.

இதில் தொடர்பு கொள்ளும்போது, பதிவு செய்யப்பட்ட குரல்களில் தகவல்கள், தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் இடம்பெறும். பின், தங்களுக்கான உதவிகளை கோரும்போது, அந்த அழைப்பு, அவர்கள் தொடர்புடைய அலுவலகங்களுக்கு மாற்றப்படும்.

அதில் பேசும் அலுவலக பிரதிநிதிகளிடம், தங்களுக்கான உதவிகளை, வரி செலுத்துவோர் கோரலாம். இதில் கோரப்படும் உதவிகள், 24 மணி நேரத்திற்குள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

related posts