இந்தியாவின் சார்பில் ஆரிஃப் கான் ஒலிம்பிக் சுடரை எடுத்துச் செல்வார். இந்தியாவின் பனிச்சறுக்கு வீரரான இவர், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர்.
தற்போது ஆரிஃப் மட்டுமே, இந்தியாவின் சார்பில் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் கலநதுக் கொள்ளும் ஒரே வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்ல, எந்த ஒரு குளிர்கால விளையாட்டிலும் இந்தியா ஒலிம்பிக் பதக்கம் வென்றதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுவரை 127 சர்வதேச போட்டிகலில் பங்கேற்றுள்ள ஆரிஃப் கானுக்குக் கடந்த ஆண்டுவரை ஸ்பான்சர்ஷிப் கிடைப்பதே சிரமாமாக இருந்தது.
ஆரிஃப், பியாங்சாங்கில் 2018 குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்க விரும்பினாலும், அவருக்கு போதுமான நிதியுதவி கிடைக்கவில்லை.
தற்போது, ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசு, ஆரிஃப் கானுக்கு நிதியுதவி வழங்குகிறது. காஷ்மீரை சேர்ந்த ஆரிஃபின் 40 சதவீத நிதி உதவியை விளையாட்டு மேலாண்மை நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ ஸ்போர்ட்ஸ் வழங்கும் நிலையில், மீதி செலவை அவர், தனது குடும்பத்தினரின் உதவியுடன் ஈடுகட்டுகிறார்.
ஜம்மு மற்றும் காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, ஆரிப்பின் பயிற்சிக்கு உதவுவதற்காக 10 லட்சம் ரூபாய் வழங்கினார்.
2011 இல் உத்தரகாண்டில் நடைபெற்ற தெற்காசிய குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் ஸ்லாலோம் மற்றும் ஜெயண்ட் ஸ்லாலோம் போட்டிகளில் ஆரிஃப் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.
ஜம்மு மற்றும் காஷ்மீரின் குல்மார்க்கில் நடைபெற்ற கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளின் இரண்டு பதிப்புகளிலும் அவர் பங்கேற்றுள்ளார்.
பிப்ரவரி 13 மற்றும் 16 ஆம் தேதிகளில் நடைபெறும் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் ஆரிஃப் கான் பங்கேற்கிறார்.
22222