Home உலகம் உலகில் மறைந்து வரும் பல தீவுகள்

உலகில் மறைந்து வரும் பல தீவுகள்

by Jey

கிரேக்க புராணங்களில் காணாமல் போன அட்லாண்டிஸ் தீவு பற்றி நிறைய குறிப்புகள் உள்ளன. பலர் அட்லாண்டிஸ் புராணம் மட்டுமே என்று கூறுகிறார்கள். அதே சமயம் உலகில் மறைந்து வரும் பல தீவுகளைப் போலவே இதுவும் மறைந்திருக்க வேண்டும் என்றும் பலர் நம்புகிறார்கள்.

உலகில் ஒரு காலத்தில் இருந்த பல தீவுகள் இப்போது காணவில்லை. அவை என்ன ஆனது என்பதை கண்டுபிடிக்க முடியாத நிலையில் அவை தொலைந்து போனதாக கருதப்படுகின்றன. இது வரை காணாமல் போயுள்ள தீவுகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன

வோர்டோனிசி தீவு (Vordonisi Island) – துருக்கியின் மாமாரா கடல் தீவு, 1010 இல் நிலநடுக்கத்தால் காணாமல் போனது. இந்த தீவு 2013 இல் மீண்டும் தோன்றிய நிலையில், 2016 ஆம் ஆண்டில் மீண்டும் காணாமல் போனது.

886 ஆம் ஆண்டில் முதலாம் ஃபோடியஸ் என்ற பைசண்டைன் மன்னர் அதன் மீது ஒரு மடத்தை கட்டினார் என்று வரலாற்றில் கூறப்பட்ட நிலையில், தீவு வெளியே தெரிந்த போது அந்த மடத்தையும் காண முடிந்தது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்த தீவைப் பற்றி மேலும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவி தீவு ( Maui Nui Island )- மாவி தீவு என்பது ஹவாய் தீவுகளின் மிகப்பெரிய தீவு ஆகும். இதில் மேலும் நான்கு தீவுகள் உள்ளன. மாவி, மொலோகாய், லனாய், கஹோலவே தீவு. முன்பு இது பிக் மாவி அல்லது Maui Nui என்ற பெரிய தீவாக இருந்தது. இது தற்போதைய ஹவாய் தீவை விட ஒன்றரை மடங்கு பெரியதாக இருந்தது. இதையும் தற்போது காணவில்லை

ஃபெர்டினாண்டியா தீவு (Ferdinandea ) – இந்த தீவு, சிசிலி நகரத்திலிருந்து 19 மைல் தொலைவில், சில சமயங்களில் மறைந்து, சில சமயங்களில் மீண்டும் தோன்றும். இது முதன்முதலில் 264-241 B.C.E கண்டறியப்பட்டது.

மொரிஷியா தீவு (Mauritia Island)- டைனோசர்கள் உலகில் இருந்து மறைந்த போது, அவைகளுடன் இந்தியப் பெருங்கடலின் இந்த தீவும் மறைந்துவிட்டது. இந்த தீவை யாரும் பார்த்ததில்லை, எனவே இந்த தீவு புராணமாக மட்டுமே கருதப்படுகிறது.

சாண்டி தீவு (Sandy Island) – இது சேபிள் தீவு என்றும் அழைக்கப்படுகிறது. நியூ கலிடோனியாவிற்கும்

related posts